Saturday, January 8, 2022

அனைத்தும் நானாகிறேன் !

 

 

கடலோடு அலையாகிறேன் !

கரை தீண்டும் நுரையாகிறேன் !

வானோடு முகிலாகிறேன் !

முகில் சிந்தும் மழையாகிறேன் !

பூவோடு மணமாகிறேன் !

மணம் வீசும் மலராகிறேன் !

விண்ணோடு நிலவாகிறேன் !

நிலவோடு ஒளியாகிறேன் !

காற்றோடு கதையாகிறேன் !

கதையோடு கருவாகிறேன் !

மண்ணோடு மரமாகிறேன் !

அனைத்தும் நானாகிறேன் !


No comments:

Post a Comment