உனை வந்து சேரவே,
நீளும் என் பாதை!
உனைக் காணவே,
காத்திருக்கும் என் கண்கள்!
உன்னுடன் பேசவே
பிறக்கும் என் வார்த்தைகள்!
உனக்காகவே துடிக்கும்
இந்த இதயம்!
உன்னையே நித்தமும்
எண்ணும் என் நினைவுகள்!
உன்னுடன் நான் வாழும் இந்த நொடிகள் நமது
வாழ்க்கை எனும் புத்தகத்தின் பொக்கிசமான பக்கங்கள்!
கவிதையும் நீ!
என் சுவாசக்காற்றும் நீ!
உடலில் உள்ள உயிரும் நீ!
உயிரில் உரையும் ஒளியும் நீ!
என்னில் நீ! என்னுள் நீ!
எதிலும் நீ!
என் கண்ணா!!!
No comments:
Post a Comment