உமது இதழ்களில் நான் புன்னகைக்கிறேன்!
உமது வண்ணங்களில் நான் வாழ்கிறேன்!
உமது தேன்துளிகளில் நான் உயிர்ப்பிக்கிறேன்!
உமது மணங்களில் நான் லயித்திருக்கிறேன்!
காற்றோடு அசைந்தாடும் உமதழகைக் காண
விடியல் வரைக் காத்திருக்கிறேன்!
நாள்தோறும் எமது நாட்களுக்கு வசந்தத்தை
அள்ளிச் சேர்க்கும் உனைப்பறிக்க
நான் அனுமதிப்பேனோ!
No comments:
Post a Comment